எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மின்னனு கழிவுகள்!! சேகரிக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள்!!

  -MMH


   எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மின்னனு கழிவுகளை சேகரிக்கும் பணியில் கல்லூரி மாணவர்களையும் இணைத்து செயல்பட உள்ளதாக  பன்னாட்டு இயக்குனர் ஆர் மதனகோபால்  கோவையில் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம்324 சி சார்பாக சமூகம் சார்ந்த பணிகளை  மகிழ்வித்து மகிழ் எனும் நோக்கத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம்324 சி யின் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக மின்னனு கழிவுகளை சேகரித்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கழிவுகளை அழிப்பது மற்றும்  மறு சுழற்சி செய்வது தொடர்பான திட்டம் கடந்த மாதம் துவங்கப்பட்டது..இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20 டன் மின்னனு கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில் இந்த பணியில் கல்லூரி மாணவர்களையும் இணைத்து செயல்படுவதற்கான நிகழ்ச்சி கோவை காளப்பட்டி சாலையில் உள்ள என்.ஜி.பி.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. என்.எஸ்.எஸ்.உடன் இணைந்து நடத்திய இதில்,கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.பன்னாட்டு லயன்  இயக்கம் 324 சி மாவட்ட செய்தி தொடர்பு தலைவர் செந்தில்குமார் மற்றும் என் ஜி பி  கல்லூரியின் என் எஸ் எஸ் பேராசிரியர்கள் பிரபா , நரசிம்மன், கிருஷ்ணராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக

பன்னாட்டு இயக்குனர் மதனகோபால், மாவட்ட ஆளுநர் ராம்குமார், கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி, ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள்,செயலாளர் ராமலிங்கம் பொருளாளர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மின்னனு கழிவுகள் தேங்குவதால் உள்ள பாதிப்புகளையும் அதனை சேகரிப்பதன் அவசியம் குறித்தும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மின்னனு கழிவுகள் சேகரிப்பில் சிறந்து செயல்பட்ட லயன் சங்கத்தினருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள்  வழங்கப்பட்டது.இதில்  நேரு நகர் லயன்ஸ் சங்கம் கோயம்புத்தூர் ராயல் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் லயன்ஸ் சங்கம், சிட்கோ இண்டஸ்ட்ரி எஸ்டேட் லயன்ஸ் சங்கம், கோயம்புத்தூர் சவேரியார் பாளையம் லயன்ஸ் சங்கம், காளப்பட்டி சிறகுகள் லயன்ஸ் சங்கம், கோயம்புத்தூர் ஷார்க்ஸ் லயன்ஸ் சங்கம் ஆகிய சங்க நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

மின்னணுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அவர்கள் 324 சி மாவட்ட ஆளுநர் ராம்குமார் அவர்களிடம் வழங்கினார்.

-சீனி போத்தனூர்.

Comments