வனத்துக்குள் திரும்ப வழி தெரியாமல் தவிக்கும் யானைகள்!!
கோவை வனச்சரகம் அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து 4 யானைகள் ஒரு குட்டியுடன் கெம்பனூர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்தது. அதிகாலை 6 மணிக்கு தோட்ட வேலைக்கு சென்றவர்கள் யானை இருப்பதை கண்டு வனத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பல முக்கிய காணொளி செய்திகள், காண https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வரவில்லை. கதிரேசன் என்பவரது விளைநிலங்களில் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்த யானைக்கூட்டத்தை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் யானைகள் வனத்தை நோக்கி செல்லாமல் போக்கு காட்டி நின்றது. ஒரு வழியாக 3 மணி நேரம் கழித்து சுமார் 9 மணி அளவில் யானை அட்டுக்கல் வனத்தை நோக்கி நகர்ந்து சென்றது. கடந்து இரு வாரங்களுக்கு
முன்பு அருகில் உள்ள தாளியூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்த யானைக்கூ ட்டம் வனத்திற்குள் செல்லாமல் இருந்தது குறிப்பிட தக்கது.
தொடர்ந்து வனப்பகு தியை விட்டு வெளியே வரும் யானைக்கூ ட்டம், மீண்டும் வனத்திற்குள் சொல்ல வழி தெரியாமல் தவித்து வருவது வாடிக்கை யாக உள்ளது. கெம்பனூர், தாளியூர் , ஓணாப்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து உள்ளது. மதில் சுவர்கள் கட்டி யானை வழித்தடத்தை சிலர் மறித்து இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரி வித்து உள்ளனர்.
எனவே யானையின் வழித்தடத்தை மீட்டு எடுக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments