வால்பாறை ஏடிஎம் மையங்களில் கந்துவட்டிக்காரர்களின் அத்துமீறல்கள்!! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!

 

-MMH

கோவை மாவட்டம் வால்பாறையில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன வால்பாறையில் சுமார் 75 ஆயிரம் மக்கள் குடியிருந்து வருகின்றனர் இங்கு உள்ள மக்கள் தேயிலை தோட்டத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். மாதம் ஐந்தாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் போடப்பட்டு வருகிறது. வால்பாறையில் மூன்று வங்கி ஏ. டி. எம். மையங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க ஏ. டி. எம். மையங்களில் பணம் எடுக்க அதிக கூட்டம் காணப்படும். இதனால் மக்கள் அதிக சிரமப்படுகிறார்கள் இதை தவிர சம்பள நாட்களில் வால்பாறை ஏடிஎம் மையங்களில் இரவு ஒன்றுக்கு மேற்பட்ட கந்து வட்டி கடையினர் ஒரே நபர் ஐம்பதுக்கு மேற்பட்ட ஏடிஎம் கார்டு பயன்படுத்தி சம்பள பணங்களை எடுக்கின்றனர் காலையில் வேலைக்கு போகாமல் தொழிலாளர்கள், வால்பாறை பொதுமக்கள், தேவைக்கு பணம் எடுக்க சென்றால் ஏடிஎம் மையத்தில் பணம் இல்லாமல் போகிறது இதனால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்பட்டு வருகிறது மக்கள் கந்து வட்டி கடைக்காரர்களிடம் பணம் பெற்றால் பணம் போடுபவரின் ஏடிஎம் கார்டை ஒப்படைத்து பணம்,  
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

வாங்க வேண்டும் இல்லை என்றால் கந்து வட்டி கடைக்காரர்கள் கடனை கழிக்கும் வரை மாதம் தோறும் சம்பளம் வாங்கி வந்தவுடன் கந்து வட்டி கடைக்காரர்கள் ஏடிஎம் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர் பின்பு கடன் வாங்கியவர் அவசர தேவைகளுக்கு மருத்துவ தேவைகளுக்கும் பணம் இல்லாமல் மேலும் மேலும் கடன் வாங்கி கடன் பிரச்சனையில் சிரமப்படுகின்றனர் ஏடிஎம் மையத்தில் அதிக பணம் வைக்கவும் ஏடிஎம் மையத்தில் இரவில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அதிக ஏடிஎம் கார்டு பயன்படுத்தினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் வால்பாறை ஏடிஎம் மையத்தில் தொழிலாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏடிஎம் மையத்தில் ஒன்று மேற்பட்ட ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த நபர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments