நிலம் கையகப்படுத்தும் பணியை வேகப்படுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவு!!

 

-MMH

கோவை-அவிநாசி ரோட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணியை வேகப்படுத்த, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார். கோவை-அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ. 1, 621. 30 கோடியில், 10 கி. மீ. , க்கு நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பணி தொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு மேற்கொண்டார். 'ஏறு தளம், இறங்கு தளங்கள் கட்டும் இடங்களில், வ. உ. சி. , மைதானம், அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ் மற்றும் சிட்ரா பகுதியில் நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும். இப்பணியை வேகப்படுத்தி தர வேண்டும்' என, கலெக்டரிடம், நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அப்பிரிவினரை தொடர்பு கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். 

சுரங்க நடைபாதை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அவிநாசி ரோடு மேம்பால பணிகள், 42 சதவீதம் முடிந்துள்ளது. 80 துாண்களுக்கு இடையே மேல்நிலை ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 481 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி சாலையை கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே. எம். சி. எச். , மருத்துவமனை, ஜி. ஆர். ஜி. , பள்ளி, பி. எஸ். ஜி. , கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும். பாலத்தின் இருபுறமும் தலா, 1. 5 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர். 

கலெக்டர் கிராந்தி குமார் கூறுகையில், ''ஓடுதளத்தை துாக்கி வைக்க, மூன்று இயந்திரங்களே இருப்பதால், வாரத்துக்கு மூன்று இடங்களில் மட்டுமே பணியாற்ற முடிவதாக தெரிவித்தனர். கூடுதலாக இயந்திரங்கள் தருவித்து, பணிகளை வேகப்படுத்தவும், அரசுக்கு சொந்தமான இடங்களில் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கும் பணியை உடனடியாக துவக்கவும் அறிவுறுத்தினேன், '' என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments