விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரங்கள் எளிதாக கிடைக்க உழவன் செயலி அறிமுகம்..

 

-MMH

 "விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்திற்குள் அறுவடை செய்ய உதவிடும் வகையில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பயன்பெற தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தனியாருக்குச் சொந்தமான தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 21 நெல் அறுவடை இயந்திரங்கள் உட்பட 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

நெல் அறுவடை காலங்களில் அந்தந்த பகுதிகளின் தேவைக்கேற்ப தனியார் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை இயந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டியும், வாடகையோடு தரகுக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளதால் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. 

இதனை தவிர்த்திட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்படி உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியாருக்குச் சொந்தமான 3909 எண்கள் டயர் வகை மற்றும் 547 எண்கள் டிராக் வகை அறுவடை இயந்திரங்கள் என மொத்தம் 4456 அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களின் விபரங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழவன் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நமது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 20 எண்கள் டயர் வகை மற்றும் 1 எண் டிராக் வகை என மொத்தம் 21 தனியார் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் விபரங்களும் உழவன் செயலியில் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்திலுள்ள அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறுவடை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=agri.tnagri

இந்த லிங்க் மூலமாக செயலியினை இணைத்து அறுவடை இயந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர், 

-முத்தரசு கோபி.

Comments