வனத்தை விட்டு வெளியேறிய மக்னா யானை பொள்ளாட்சியை கடந்து கோவை மதுக்கரை பகுதியை நோக்கி சென்றதாக வனத்துறையினர்!!

 

  -MMH 

வனத்தை விட்டு வெளியேறிய மக்னா யானை பொள்ளாட்சியை கடந்து கோவை மதுக்கரை பகுதியை நோக்கி சென்றதாக வனத்துறையினர்! 

   கோவை மதுக்கரை வனச்சரக வனத்துறையினர் தெரிவித்துள்ளதாவது;

"தருமபுரியில் பிடிபட்ட மக்னா என்ற யானை, கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, உலாண்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட வரகாளியாற்றில் விடப்பட்டது. 10 நாட்களாக ரிசர்வ் வனப்பகுதிக்குள் சுற்றி திரிந்த யானை பின்னர் சேத்துமடை பகுதிக்கு வந்தது. இந்த நிலையில் இரவு வெளியில் பயணிக்க ஆரம்பித்த யானை நல்லூர் சோதனைச்சாவடிக்கு அருகில் சென்று அதன் பின்னர் பாலக்காடு பிரதான சாலையை கடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்த யானை தற்போது கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட மதுக்கரை நோக்கி நடந்து வந்த வண்ணம் உள்ளது. யானையின் நடமாட்டத்தை தடுக்கவோ அல்லது அதனை திசை திருப்பவோ இதுவரை யாரும் ஈடுபட வில்லை. ஆயினும் யானையின் நடமாட்டத்தை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானை செல்லும் அனைத்து கிராமங்களும் உஷார்படுத்தப்பட்டு வருகிறது. யானை நடமாட்டம் குறித்து கோவை கோட்ட வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments