கைகளில் தேயிலை பறிப்பதை விடுத்து கத்திரியில் வெட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!!

   -MMH

கைகளில் தேயிலை பறிப்பதை விடுத்து கத்திரியில் வெட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!!

   கோவை மாவட்டம் வால்பாறை மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் வால்பாறை பகுதி எங்கும் பார்த்தாலும் பசுமையான தேயிலை தோட்டம் மற்றும் இயற்கை காட்சிகள் நிறைந்தவை. வால்பாறை சுற்றிலும் நூற்றுக்கணக்கான எஸ்டேட்டுகள் உள்ளன தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் கையில் தேயிலை பறித்த காலம் போய்விட்டது.

இன்று தொழிலாளர்கள்  கத்திரியின் உதவியுடன் தேயிலையை வெட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால் தேயிலை பறிக்கும் பெண்கள்  இயந்திரமாக மாறி உள்ளார்கள் இதனால் கத்தரியை வைத்து தேயிலை வெட்டுவதால் பெண்களுக்கு வயிற்று வலி மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. இதனால் வால்பாறை பகுதியில் இருந்து அதிக தொழிலாளர்கள் தனது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் வால்பாறையின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது மீண்டும் தொழிலாளர்களுக்கு கையில்  தேயிலை பறிக்கும் வேலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு அறிவித்த புதிய ஊதியம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.


இல்லை என்றால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியாக இருக்கும். தொழிலாளர்களின் நிலைமை மாறவேண்டும் தமிழக அரசு அறிவித்த புதிய ஊதியம் வருமா என்று தொழிலாளர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் மீண்டும் வால்பாறை தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் இருப்பதற்கு தமிழக முதல்வர் அவர்கள் பரிசீலனை செய்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை தந்து வால்பாறை மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments