ஏற்றுமதி புத்துயிர் பெறும்! அமெரிக்கா, ஐரோப்பாவில் இயல்பு நிலை - பின்னலாடை துறையினர் நம்பிக்கை...

 

-MMH

  திருப்பூர்:''இறக்குமதி நாடுகளில் இயல்பு நிலை திரும்புவதால், திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் மீண்டும் புத்துயிர் பெறும்'' என, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஆதரவு நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து, நேற்றுடன் ஓராண்டாகிறது; போர் முடிவுக்கு வரவில்லை.

உலகின், மிகப்பெரிய மூலப்பொருள் ஏற்றுமதி நாடுகளிடையே நிலவும் போர் சூழலால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும், பொருளாதார மந்தநிலைக்கு ஆளாகியுள்ளன. போர் சூழல் காரணமாக, பொருளாதார தடை விதிக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. 'ஆட்டோமொபைல்' உட்பட, பல்வேறு தொழில் களும், விவசாயமும் பாதித்தது. கோதுமை, பார்லி உற்பத்தியிலும், சூரியகாந்தி சமையல் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உக்ரைன் போர் சூழல் காரணமாக, உலக மக்களின் வாங்கும் திறன் குறைந்த போயுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், மக்கள் போரின் எதிர்விளைவுகளை சந்திக்க, தங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றிக்கொண்டனர்; ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டனர். இதன் காரணமாக, இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும் நேரடியாக பாதித்தது. திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மட்டும், 75 சதவீதம்; கடந்த ஆண்டு பஞ்சு விலை உயர்வுக்கு பிறகு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதிய ஆர்டர் வெகுவாக குறைந்துவிட்டது.

பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர், இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது. சாயக்கழிவு சுத்திகரிப்பு, நுால் விலை, மூலப்பொருள் விலை உயர்வு, மின் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளை சந்தித்து, அதிலிருந்து எளிதாக மீண்டு வந்த திருப்பூருக்கு, உக்ரைன் போர் சூழல் எதிர்பாராத சவாலாக மாறிவிட்டது. 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பது போல், புதிய ஆர்டர் வரத்து இல்லாமல், திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது. உக்ரைன் போர் துவங்கி, நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது; அதற்கு பிறகும், அந்நாடுகள் போர்க் கோலத்தை கலைக்காமல், போராடி வருகின்றன.

பரபரப்பு கூடும் இருப்பினும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், பொருளாதார மந்த நிலை மாறி, அந்நாட்டு மக்கள் இய ல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டில் இருந்து, அமெரிக்கா இயல்பு நிலைக்கு வந்துவிட்டது; ஐரோப்பிய நாடுகளும், படிப்படியாக இயல்பான இயக்கத்து மாறி வருகின்றன. இந்த நிதியாண்டை சமாளித்தால் போதும்; வழக்கமான அளவு ஆர்டர்கள் வரத்துவங்கியதும், திருப்பூரில் மீண்டும் பரபரப்பு கூடிவிடும் என, தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகாக, 

-பாஷா.

Comments