திருப்பூரில் விபசாரம் நடத்திய விடுதி மேலாளர் கைது.

 

-MMH

திருப்பூரில் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

https://youtu.be/Ga6u1cnN78k

உடனடியாக போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு அறையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது அழகியை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அந்த விடுதியின் மேலாளரான தேனியை சேர்ந்த தமிழரசுவை (வயது 26) போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-பாஷா.

Comments