சுற்றுலாப் பயணிகளை கவனிக்காமல் கடமையை மறந்த காவலர்..!!

தேனி மாவட்டம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் அதே நேரத்தில் ஆபத்துக்களும் நிறைந்த இயற்கை வளங்களை அள்ளிக் கொடுத்துள்ளது.

அதில் ஒன்றுதான் கும்பக்கரை அருவி இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்தப் பகுதியில் ஆபத்து அதிகம் என்பதால் சுற்றுலா பயணிகளை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி பாதுகாத்து வரவேண்டியது வனத்துறையினரின் கடமையாக உள்ளது இருந்த போதிலும் இப்படி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய வனத்துறையினரின் அஜாக்கிரதையால் பல இன்னல்களுக்கு சுற்றுலா பயணிகள் ஆளாகின்றனர்.

இப்பகுதியில் உள்ள ஆபத்தினை உணராமல் சிறு பச்சிளம் குழந்தைகளுடன் ஆபத்தான இடங்களில் இப்படி கடமை உணர்வை மறந்து தூங்கிய நிலையில் உள்ளனர் இதுகுறித்து பொதுமக்கள் இதுதான் பொதுமக்களை பாதுகாக்கும் வனத்துறையின் என்று லட்சணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ரபீக் ராஜா.

Comments