புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!!
கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெசிஸ் உதயராஜ், இவருக்கு ஈச்சனாரி பகுதியில் உள்ள பேக்கரியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அங்கு சோதனை மேற்கொண்ட பொழுது அங்கு, 14 புகையிலை பாக்கெட்டுகளும் 14 பீடி பண்டல்களும் இருப்பதைக் கண்டார், மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி இவற்றை விற்பனை செய்ததாக, ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த 66 வயதான அர்ஜுனன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments