அனைவருக்கும் இலவச வீடு இடுக்கி மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு!!!


அனைவருக்கும் இலவச வீடு இடுக்கி மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு!!!

  கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் உப்புதரி ராஜிவ் காந்தி  காலணியில் கடந்த 1995 - ம் ஆண்டு  அரசு வீடு கட்டுமான துறை அமைத்துக் கொடுத்த சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள்  சில ஆண்டுகளுக்கு முன்பே சிதிலம் அடைந்து காணப்பட்டது இங்கு வாசிக்க கூடிய மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி வசித்து வருகின்றனர். 


இதனை சரி செய்ய பல முறை அதிகாரிகளை அனுகியும் பலனின்றி போனது. இந்த காலணியை குறித்து பலமுறை செய்திகளிலும் ,ஊடகங்களிலும் வெளிவந்தன.ஆனாலும் பலனில்லை.மனித உரிமை  ஆணையத்தின் உறுப்பினர் கின்னஸ் மாடசாமி மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரின் பேரில்  மனித உரிமை ஆணையம் இதில் இடைபட்டு உடனடியாக போதுமான வசதிகளுடன் அனைவருக்கும் புதியதாக வீடு கட்டி தரவேண்டும் என்று இடுக்கி மாவட்ட ஆட்சியாளருக்கு அறிவிப்பு கொடுத்தது. 



அதன் பேரில்  ராஜிவ் காந்தி காலனியில் வசிக்கும் அனைவருக்கும் புதியதாக வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.

-ஜான்சன்                                                                                                                                            மூணார் .

Comments