வால்பாறையை அடுத்த அக்காமலை புல் மேட்டில் காட்டுத்தீ! தீயை அணைக்க போராடி வரும் வனத்துறையினர்!

 

-    MMH

கேரள வனப் பகுதியில் பற்றிய காட்டுத் தீ, வால்பாறையை அடுத்த அக்காமலை புல்மேடு பகுதிக்கும் பரவியதால் அங்குள்ள வனப் பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது. வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை புல்மேடு. பசுமை நிறைந்த இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத் துறையினா் இந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புல்மேட்டின் ஒரு பகுதி கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூா் ஒட்டியுள்ள பகுதியுடன் இணைந்து அமைந்துள்ளது. மறையூா் பகுதி புல்மேட்டில் சனிக்கிழமை காலை காட்டுத் தீ பற்றியது. தீ மளமளவென அக்காமலை புல்மேடு வரை பரவி பற்றி எரியத் தொடங்கியது. வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் வனத் துறையினா் புல்மேடு பகுதிக்கு  சென்று பாா்வையிட்டனா். தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments