ஒட்டப்பிடாரத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது!!!

- MMH

தூத்துக்குடி மாவட்டத்திற்கு  மார்ச் மாதம்  மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களின் கள ஆய்வுகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாறுதல் சிறப்பு முகாம்கள் பிப்ரவரி 11,12,18,19,25,26 மற்றும் மார்ச் மாதம் 4,5 தேதிகளில் நடைபெறும்.

இந்த  சிறப்பு முகாமில் உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் சம்பந்தமான மனுக்களை மண்டல துணை வட்டாச்சியர் முலமாக தீர்வு கிடைக்கும். விவசாயிகள்  உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  உத்தரவு.

தற்போதுகணினிவழி பட்டா தொடர்பாக நிலஉரிமையாளர்களால் அதிக அளவில் புகார்கள் தரப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, பட்டா தொடர்பான பிரச்சினைகளை சிறப்புமுகாம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசின் திட்டங்கள் வீட்டுக்கே சென்று சேரும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.பட்டாவில் உள்ள தவறுகளை சரிசெய்து, நில உரிமையாளர் கோரிக்கையை நிறைவேற்றுவதே இதன் நோக்கம்.

இதைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் கிராம நிர்வாக அலுவலத்தில் சிறப்பு முகம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் ஆய்வு  நடைபெற்றது. 

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments