வனப்பகுதியில் தீ பிடிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு போஸ்டர்! வனத்துறையினர் நடவடிக்கை!!

 

-MMH

கோவை தடாகம் முதல் ஆணைகட்டி வரை வனபகுதிகளாக உள்ளது, வனப்பகுதியில் தீ பிடிப்பதை தவிர்க்க, இந்த பகுதிகளில், செல்லும் பொதுமக்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வனத்துறையினர் இன்று அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர், அந்த போஸ்டரில், காப்புக்காடு பகுதியின் அருகே வசிக்கும் நில உரிமையாளர்கள், தங்களது தோட்டங்களை சுத்தம் செய்யும் பொழுது, சேகரிக்கும் கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதனால் வனத்தில் தீ ஏற்பட பெரும் காரணமாக அமைகின்றது, இதனை தவிர்க்கப்பட வேண்டும் எனவும், வனப்பகுதி வழியாக செல்பவர்கள், மற்றும் கால்நடைகளை வனப்பகுதியில் மேய்க்க செல்பவர்கள், புகைப்பது, அல்லது எரிந்த தீக்குச்சிகளை வீசி செல்வதால், வன பகுதிகளில் தீ பீடிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளது எனவும், வனத்தில் தீப்பிடித்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தீயை அணைக்க தங்களால் இயன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும், வனத்திற்குள் செல்வதும், வனத்தில் தீபற்ற வைப்பதும், வனப்பகுதியில் தீப்பிடிக்க உடந்தையாய் இருப்பதும் இந்திய வன சட்டப்படி குற்றம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

 கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments