பாத்திமா மாதா பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்!!!

 -MMH

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்ன கானல் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள பாத்திமா மாதா பள்ளியில் நாளை ஆண்டு விழா மிகவும் கோலாகலமாக நடக்க உள்ளது. 18 ம் தேதி பிப்ரவரி மாதமான நாளை சனிக்கிழமை சுமார் 1:30 மணி அளவில் ஆண்டு விழா துவங்கப்பட உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் இந்திய தேசிய காங்கிரஸ் அணி உறுப்பினர் அமைச்சர் டீன் கூரியக்கோஸ் அவர்களும் தேவிகுளம்  சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் A.ராஜா அவர்களும் இடுக்கி மாவட்ட கல்வித்துறை துறையைச் சார்ந்த ஸ்ரீமதி K. பிந்து அவர்களும்  விஜயபுரம் டயசிஸ் பிஷப் அருட்தந்தை ஜஸ்டின் மடத்தில் பரம்பில்  மற்றும் கோ ஆபரேட்  மேனேஜர் அருட்தந்தை   டாக்டர் ஆண்டனி ஜார்ஜ் பட்டப்பரம்பில் மற்றும் கட்டப்பனை மாவட்ட கல்வி அதிகாரி(DEO) S. அஜித் குமார் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.

மற்றும் அப்பள்ளியில் பல வருடங்களாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஜான்சன் அவர்களின் பணி நிறைவு விழாவும் நடைபெற உள்ளதால் பாத்திமா மாதா பள்ளியின் சார்பாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments