கோவையில் இன்சுலின்சா காய்ச்சல் பரவுவதை தடுக்க 125 இடங்களில் மருத்துவ முகாம் அமைப்பு!!

 

-MMH

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த காய்ச்சல் தொண்டை வலி, சளி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கோவையில் பலர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த காய்ச்சல் பாதிப்பை கண்டறிய பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் 40 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க கோவை மாவட்டத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊரகப்பகுதிகளில் 84 இடங்கள், மாநகராட்சியில் 41 இடங்கள் என மொத்தம் 125 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காய்ச்சல் பாதிப்புள்ள ஏராளமானோர் முகா முக்கு வந்து பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு சளி மற்றும் ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்புளூயன்சா அறிகுறி உள்ளவர்களுக்கு அதற் கேற்ப மருந்து, மாத்தி ரைகள் வழங்கப்பட்டன. காய்ச்சல் பாதிப்பு வேறு யாருக்கும் பரவாமல் இருக்க அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: - கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வருபவர்களில் 15 சதவீதம் பேருக்கு இன்புளூயன்ஸ் பாதிப்பு காணப்படுகிறது. 3 அல்லது 4 நாட்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிப்பு குறைகிறது. இவர்கள் உள்நோயாளிகளாக அனுமதித்து

சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றி இன்புளூயன்சா பாதிப்பை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments