ஒட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சியில் வேளாண் சிறப்பு முகாம்!!

-MMH

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சியில் வேளான் சிறப்பு அடுக்கு முகாம்  இன்று நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் வேளாண் அடுக்கு சிறப்பு முகாம்  சனிக்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தி  வெளியிட்டு  இருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி சுற்று வட்டார விவாசயிகள் GRAINS என்ற இணையதளத்தில்  தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு,  நில உரிமை ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்தனர். 

இந்த நிகழ்வுகளில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments