தனியார் விவசாய தோட்டங்களில் விஷம் கலந்த பொடிகளை தூவி காகங்களை கொன்ற நபர் கைது!!

 
  -MMH

தனியார் விவசாய தோட்டங்களில் விஷம் கலந்த பொடிகளை தூவி காகங்களை கொன்ற நபர் கைது!! 

  பொள்ளாச்சி அருகே உள்ள பெரியா கவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் சில தினங்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்ததும், மேலும் இறந்த காகங்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை நாகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில்ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் நிரப்பிக் கொண்டிருந்தார் விவசாயி நாகராஜை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பினார். பின்னர் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் துரத்திச் சென்று அந்த நபரை மடக்கிபிடித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் காகங்களைக் கொன்ற சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி சூர்யா (37)என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட காகங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் போது வெண்படை நோயை குணப்படுத்த மருந்து தயாரிக்க காகங்களை கொன்றதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இவர் காகங்களை உணவு விடுதிகளுக்கு பிரியாணி தயாரிக்க கொடுப்பதற்காக கொன்றிக்கலாம் என கூறப்படுகிறது.

இகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி நூற்றுக்கணக்கான காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்தது. இந்த சூழ்நிலையில் விஷம் வைத்து அந்த நபர் காகங்களை கொன்று வந்துள்ளார்.

விவசாய தோட்டங்களில் கால்நடைகள், மயில்கள் உள்ளது இதனால் அவைகள் இறக்ககூடும் எனவே பிடிபட்ட நபரை தீர விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி. ராஜேந்திரன்.

Comments