பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்ற நினைத்த தனியார் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

-MMH

இரும்பு கம்பிகள் வாங்க பணம் அனுப்பிய நபர் தனியார் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பரிதாபம்!!

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயதான பரக்கத்துல்லா, இவர் சுல்தான்பேட்டை பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இரும்பு கம்பிகள் வியாபாரம் செய்து வருகிறார், கடந்த 14. 01. 2023 அன்று, பரக்கத்துல்லா, இரும்பு கம்பிகள் வாங்குவதற்காக, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் 18, 04, 550, ரூபாய் பணத்தை செலுத்தினார். 

ஆனால், அவர்கள் இரும்பை தராமல் எமாற்றினர். இதனைத் தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான 50 வயதான சுரேஷ் என்பவரை அழைத்து இது குறித்து கேட்ட பொழுது, சுரேஷ் பரக்கத்துல்லா வை, மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பரகத்துல்லா இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான சுரேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சி. ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments