கோவையை சேர்ந்த யோகா வீராங்கனை அசத்தல்!!

  -MMH

கோவையை சேர்ந்த யோகா வீராங்கனை அசத்தல்!!

  இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்கள் வென்று கோவையை சேர்ந்த யோகா வீராங்கனை வைஷ்ணவி அசத்தல்..

கோவை திரும்பிய வைஷ்ணவிக்கு உற்சாக வரவேற்பு…

கோவை தனியார் கல்லூரியில்  இளங்கலை காட்சி ஊடகவியலில் பயின்று வரும் மாணவி வைஷ்ணவி,  தேசிய, சர்வதேச அளவில் என பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்நிலையில் கடந்த 19 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள்  இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்  மூன்றாவது சீனியர் தேசிய யோகா சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.இதில் தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்ட வைஷ்ணவி இரண்டு தங்கபதக்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்தியாவில் இருந்தும் சுமார் 28 மாநிலங்களை சேர்ந்த யோகா வீரர்,வீராங்கனைகள் ஜோத்பூர் இறுதி போட்டியில் கலந்து கொண்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவையை சேர்ந்த வைஷ்ணவி மூன்று பதக்கங்களை வென்று கவனத்தை ஈர்த்துள்ளார்..இந்நிலையில்,ஜோத்பூரிலிருந்து கோவை விமான நிலையம் வந்த வைஷ்ணவிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே யோகாவில் பல சாதனைகளை குவித்து வரும் வைஷ்ணவி செய்தியாளர்களிடம் கூறுகையில்,ஜோத்பூரில் நடைபெற்ற தேசிய யோகா சேம்பியன்ஷிப் போட்டியில், ஆர்ட்டிஸ்ட்டிக்,மற்றும் ரிதமிக் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என இரண்டு தங்க பதக்கங்களையும்,தமிழக அணி சார்பாக குழு போட்டியில் வெள்ளி பதக்கமும் தாம் பெற்றதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து கோவாவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறிய அவர்,ஏசியன் கேமில் கலந்து கொள்வதை இலட்சியமாக கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments