நிலத்தடி நீரினை செறிவூட்டுதல் குறித்து உடுமலையில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு!!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு நீர்வளத்துறை நிலநீர் உபகோட்டம், கோயமுத்தூர் சார்பில் ஜல்சக்தி அபியான் தேசிய நீரியல் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரினை செறிவூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வாக 02.03.2023 வியாழக்கிழமை கல்லூரியில்  கருத்தரங்கம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து உடுமலை நகரில்  ஊர்வலம் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு நடை பயணம் மூலம் மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர்.சோ.கி.கல்யாணி, உதவி பேராசிரியர்கள் முனைவர்.து.விஜயகுமார், முனைவர்.கோ.ரேவதி, நிலநீர் உபகோட்டம் கோயமுத்தூரின் உதவி செயற்பொறியாளர் ஆ.புவனேஸ்வரி, உதவிப்பொறியாளர்கள் அ.கீதா, ச.வனிதா மற்றும்

இரா.ஸ்ரீராம்குமார், உபகோட்ட அலுவலர்கள் மற்றும்  மாணவர்கள்  உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.

ஊர்வலம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களிடம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வழிமுறைகள், நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவதின் அவசியம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து மரக்கன்றுகள் அக்கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. உடுமலைப்பேட்டைகாவல் நிலையத்திலிருந்து காவலர்கள் பாதுகாப்பு வழங்கினர்.

-உதயகுமார், உடுமலை.

Comments