ஒட்டப்பிடாரத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!!!

-MMH

உயர்நீதிமன்றம்   தீர்ப்பு வெளியான உடன் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில்  முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் தலைமையில்   அதிமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

அதிமுக பொதுச் செயலர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 28) பரபரப்பு தீர்ப்பளித்தது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒபிஎஸ்  தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் அதிகாரம் என்ன:

கட்சியில் இருந்து  யாரை வேண்டுமானாலும் நீக்க முடியும். யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியும். இதற்கான முழு உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது.

அதிமுகவின் கூட்டணி முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியும்.தேர்தலில் எந்த வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதை ஜெயலலிதா போல தனியாளாக முடிவு எடுக்க முடியும்.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியான உடன் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளார தேர்ந்தெடுக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி  அவர்கள்  முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் வங்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments