கோவை பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி சார்பாக கண் அழுத்த நோய்சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

-MMH

கோவை பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி சார்பாக கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது.

கோவை பி.பி.ஜி.கல்வி குழுமங்கள் சார்பாக சாலை பாதுகாப்பு மற்றும்  பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில்,  உலக கண் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, கோவை சரவணம்பட்டி பகுதியில் பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி சார்பாக குளுக்கோமா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் மருத்துவர் தங்கவேலு அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில்,தாளாளர் சாந்தி தங்கவேலு,நிர்வாக அறங்காவலர் அக்‌ஷய் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து மாணவ,மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே,கண் அழுத்த நோய் குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்..துறை தலைவர் ஜான். பிரான்சிஸ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா சுதா தலைமை வகித்தார்.தொடர்ந்து அவர் பேசுகையில்:

கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே  உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து மக்களிடையே உணர்த்தும் பொருட்டு  எங்களது கல்லூரி மாணவ,மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

கல்லூரி மாணவ,மாணவிகள் கண் அழுத்த நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி   துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

-சீனி, போத்தனூர்.

Comments