ஒட்டப்பிடாரத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம் !!!
ஒட்டப்பிடாரத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம் !!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் மற்றும் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் பேசியது:
https://youtu.be/tNu2nCGSfV8
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மிகப்பெரிய ஊராட்சி ஆகும். தமிழ் நாட்டின் சிறந்த ஊராட்சி ஒன்றியமாக நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய எனது முழு ஒத்துழைப்பு உண்டு . பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து ஆலோசனை வழங்கினார்.
சர்வதேச மகளிர் தினம்:
இல்லத்தரசிகள், ஆசிரியைகள், பொருளாதார நிபுணர்கள், பொறியாளர்கள், பெண்கள் என எல்லா துறைகளிலும் முன்னேறி இந்த உலகத்திற்கு மேன்மையை அளிப்பவர்கள். ஆணாதிக்கத்தின் தடைகளை தகர்த்து, சமூகத் தடைகளைத் தாண்டி, சக்தி வாய்ந்த சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள் இன்றைய பெண்கள்.
1900 ஆண்டுகளில் இருந்தே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கென தனி வரலாறும் உண்டு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.
Comments