ரியல்மி நிறுவனம் தனது நார்சோ பிராண்டில் இருந்து புதிய என் 55 மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது!!

 -MMH

ரியல்மி நிறுவனம் தனது நார்சோ பிராண்டில் இருந்து புதிய என் 55 எனும் 33 வாட்ஸ் சார்ஜிங் மற்றும் 64 MP ஏ.ஒன் கேமரா,கொண்ட நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட என் 55 ஸ்மார்ட் போன் அறிமுக விழா கோவை தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. 

இதில்  நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர் பேசுகையில்,புதிதாக அறிமுகமாகி உள்ள நார்சோ 55 வகை மாடலி்ல், இரண்டு வேரியண்டுகள் வெளியாகியுள்ளது. இதன் 4ஜிபி + 64ஜிபி வகையின் விலை ரூ.10,999 ஆகும். அதேபோல் 6ஜிபி + 128ஜிபி வகையின் விலை ரூ.12,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் இரு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அவை ப்ரைம் ப்ளூ, ப்ரைம் பிளாக் ஆகும். அதேபோல், அமேசானில் மூன்று மாதத்திற்கு,நோ காஸ்ட் இ.எம்.ஐ.சலுகையும் உள்ளது. இதில் செல்பி கேமராவுக்காக 8 எம்பி மெகாபிக்சல் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க கேமராவைப் பொருத்தவரை, 64 எம்பி மெகாபிக்சல் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

-சீனி, போத்தனூர்.

Comments