64 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரித்த 'முயற்சி'யின் வலிமை!!

 -MMH

திருப்பூர், 'முயற்சி' மக்கள் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அரோமா ஓட்டல் வளாகத்தில் நடந்தது.சி.பி., ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குனர் அரங்க கோபால், தலைமை வகித்தார்.

சித்ராலயா பனியன் நிறுவன உரிமையாளர் ரங்கசாமி, முன்னிலை வகித்தார். துணை தலைவர் கார்த்திகேயன், வரவேற்றார்.மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, வனம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகி சுந்தர்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இளம் ரத்தக் கொடையாளர் 25 பேர், அதிகம் முறை ரத்த தானம் செய்த 10 பேர், ரத்தம் வழங்கிய பெண்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவராக சிதம்பரம், துணை தலைவர்களாக சதீஷ், சுப்பிரமணியம், கார்த்திகேயன், பாலசுப்பிரமணியன், செயலாளர்களாக ஆறுமுகம், விஜயராஜ், இணை செயலாளர்களாக சதீஷ்குமார், மயில்சாமி, தண்டபாணி, விஜய மோகன், பொருளாளர்களாக முருகேசன், மணி, துணைப் பொருளாளர்களாக சுப்ரமணியன், முருகானந்தம், ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றனர்.

தலைவர் சிதம்பரம் கூறுகையில், ''திருப்பூர், தாராபுரம், உடுமலை, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கடலுார், திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 1,147 முகாம்கள் மூலம் 64 ஆயிரம் யூனிட் ரத்தம் வழங்கி உள்ளோம்.தல சீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் ரத்தம் வழங்கி உள்ளோம். இந்த ஆண்டு 5 ஆயிரம் யூனிட் ரத்தம் பெற திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பாஷா.

Comments