முதல்வரின் தனிப்பிரிவுக்கு மூதாட்டி ஒருவர் புகார் மனு! தம்முடைய சொத்துக்களை அபகரிக்க முயலுவதாக வேதனை!!

 

 -MMH

கோவை மாவட்டம் சுந்தராபுரம் அடுத்த மாச்சம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ருக்குமணி, இவர்  தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்க்கு, ஒரு மனு ஒன்றை அளித்துள்ளார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது. எனது கணவர் வேலுச்சாமி அவருக்கு பாத்தியப்பட்ட சொத்தினை கிரிராஜ் என்பவருக்கு கடன் வாங்கும் பொருட்டு கிரையம் செய்து கொடுத்ததாகவும், இதனை அடுத்து கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் பொழுது அதனை வாங்க மறுத்து கிரிராஜ் சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்துடன், பல இடையூறுகளை செய்து சொத்தை எங்களுக்கு மீண்டும் எழுதி தர மறுத்துவிட்டார் எனவும், 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் எனது கணவர் வேலுச்சாமி இதனால், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் , மேலும் இதுகுறித்து கிரிராஜ் மீது காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்து இருந்தேன், இதனை அடுத்து எங்களது வீட்டினை காலி செய்து கொடுக்குமாறு நீதிமன்றத்தில் எங்கள் மீது கிரிராஜ் வழக்கு தொடர்ந்து உள்ளார், நானும் எனது குடும்பமும் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த வழக்கிற்கு தக்க பதில் அளித்து வந்த நிலையில், எங்களுக்கு தெரியாமல் இந்த சொத்தினை கிரிராஜ் ஜாகிர் உசேன் என்பவருக்கு விற்பனை செய்துவிட்டார் எனவும், ஜாகிர் உசேன், என்பவர் இந்த சொத்தை, சதாம் உசேன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டதாகவும், இப்பொழுது இதனை விலைக்கு வாங்கிய சதாம் உசேன், எங்களை காலி செய்ய சொல்லி மிரட்டி வருவதாகவும், எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments