ஆதித்தமிழர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது!!

  -MMH

ஆதித்தமிழர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது!!

  ஆதித்தமிழர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட பல்வேறு   தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் மண்டல செயலாளர் கூட்டம் தலைவர் கு.ஜக்கையின் தலைமையில் மதுரை அரசரடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தீர்மானம்.1 

எதிர்வரும் ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாக நாம் பகுதிகளில் சிறப்பாக எளிய மக்களிடம் அம்பேத்கரை கொண்டு செல்லும் விதமாக கிராமங்களில் விழாவாக கொண்டாடவேண்டும் என இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தீர்மானம்.2

அருந்ததியர் மக்களை தொடர்ந்து பொதுவெளியில் வந்தேறிகள் இவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு தரவேண்டும் என இழிவாக பேசிய சீமானை ஆதித்தமிழர் கட்சி சார்பில் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது தமிழக அரசு உடனே இவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது..

தீர்மானம்.3 

இந்திய அரசியல் சட்டத்தை எழுதிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை மத்திய  அரசு பொது விடுமுறை யாக அறிவித்ததை ஆதித்தமிழர் கட்சி வரவேற்கிறோம்.


தீர்மானம்.4

ஆதித்தமிழர் கட்சி யின் அதிகாரப்பூர்வ மாத இதழ் நடுகல் இதழை மிக விரைவில் தொடர்ச்சியாக கொண்டு வருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

தீர்மானம்.5 

தமிழ்நாடு அரசு சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் தற்கொலை படை தளபதி வீரத்தாய் குயிலிக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் முழுஉருவ சிலை அமைக்க படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் தளபதி முக.ஸ்டாலின் அவர்களுக்கு அருந்ததியர் மக்களின் சார்பில் ஆதித்தமிழர் கட்சி நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 6.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி மன்னர் கட்டபொம்மன் அவர்களின் மெய் காப்பு படை தளபதிகள் பொட்டிபகடை முத்தன்பகடை கந்தன் பகடை ஆகியோர்க்கு தோரணை வாயிலும் மணிமண்டபம் அமைத்துதர பல்வேறு போராட்டங்கள் எடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை ஆகவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.


இந்த செயற்குழு கூட்டத்தில் பொது செயலாளர் விஷ்வை குமார் அமைப்பு  திலிபன் மாநில அலோசகர் விடுதலை குமார் நிதி செயலாளர் சேகர் துனை பொது செயலாளர் விருதை வசந்தன் தூய்மை பணியாளர் அணி செயலாளர் குருசாமி மற்றும் தூத்துக்குடி  தெற்கு மாவட்ட செயலாளர் மு. ஊர்காவலன் , மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஆனந்த மகாலட்சுமி மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர் மண்டல செயலாளர்கள் கலந்துகொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments