கோவை கே.சி.டபிள்யூ.கல்லூரியில் இவான்ஸா ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!!

  -MMH

கோவை கே.சி.டபிள்யூ.கல்லூரியில் இவான்ஸா ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!! 

  கோவை கே.சி.டபிள்யூ.கல்லூரியில் நடைபெற்ற இவான்ஸா ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் அசத்தலான ஆடைகள் அணிந்து அணி வகுப்பு நடத்தினர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள கே.சி.டபிள்யூ.கல்லூரி அழகு கலை மற்றும்  ஆடை வடிவமைப்பு  துறை சார்பாக இவான்ஸா எனும் ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. 

முன்னதாக  இதன் துவக்க விழா கல்லூரியின் அறங்காவலர் நந்தினி ரங்கசாமி தலைமையில்  நடைபெற்றது. இதில் அழகு கலை மற்றும்  ஆடை வடிவமைப்பு  துறை  தலைவர் சாந்தி ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெங்களூரு ஆர்மி ஆடை அலங்கார தொழில் நுட்ப கல்லூரியின்  முதல்வர் கதிர்வேலு கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து நடைபெற்ற ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியில், கே.சி.டபிள்யூ.கல்லூரியின் அழகு கலை மற்றும்  ஆடை வடிவமைப்பு  துறை மாணவிகள் தயாரித்த வண்ணமயமான ஆடைகளை சிறுமிகள் அணிந்தபடி மேடையில் ஒய்யார நடை நடந்தனர்.இதனை தொடர்ந்து இதே துறையின் இரண்டு மற்றும் மூண்றாமாண்டு மாணவிகள் தயாரித்த நவீன ரக ஆடையை அணிந்தபடி மேடையில் மாணவிகள் நடந்தனர்.இதில் நடுவர்களாக கோவையின் முக்கிய தொழில் பெண் முனைவோர்கள் ரஜதா, மோனிஷா, ஸ்வேதா ஆனந்தி,அபர்ணா சுங்கு,தேன்மொழி,புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களை தேர்வு செய்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments