ஈத் பெருநாள் பண்டிகையையொட்டி கோவையில் இஸ்லாமிய மக்கள் சிறப்பு கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டனர்!!

  

 -MMH

இஸ்லாமிய மக்களால் கொண்டாடக்கூடிய முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை குணியமுத்தூர், உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர். 

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments