கோவையில் உணவு பிரியர்களின் தனித்துவமான சுவைகளை ஒரே இடத்தில் வழங்கும் விதமாக "ஃபுட்ஸ்டிவல்" எனும் உணவு திருவிழா!!

 -MMH

கோவையில் உள்ள முக்கிய உணவகங்களின் சுவைகளை ஒரே இடத்தில் சுவைக்கும் விதமாக ஃபுட்ஸ்டிவல் எனும் உணவு திருவிழா நவ இந்தியா பகுதியில் உள்ள அலெக்சாண்டர் ஈக்குவெஸ்டிரியின் வளாகத்தில் துவங்கியது. ப்ளாங்க் ப்ளான் (blank plan) ஈவெண்ட்ஸ் சார்பாக முதல் சீசனாக நடைபெற உள்ள இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இதில் கவுரவ அழைப்பாளர்களாக அனுஷா ரவி,சங்கீதா பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள ஃபுட்ஸ்டிவல் குறித்து ஒருங்கிணைப்பாளர் ப்ளாங்க் ப்ளான் ஈவெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அபினயா கோகுல் கூறுகையில்,கோவை வாழ் உணவு பிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக கௌவை நகரத்தின் முக்கிய உணவகங்களின் 40 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துள்ளதாகவும்,மேலும் குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக கோவையின் அனைத்து விருப்பமான சுவைகளையும் முதல் முறையாக ஒரே இடத்தில் கொண்டு வரும் தனித்துவமான உணவுத் திருவிழாவாக இது இருக்கும் என அவர் தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments