இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 53,852 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பிலிருந்து 11,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,47,024 ஆக உயர்ந்துள்ளது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments