குறிச்சியில் பாஜக நடத்திய கபடி போட்டி! - இளைஞர்கள் மகிழ்ச்சி..!!

 
  -MMH

குறிச்சியில் பாஜக நடத்திய கபடி போட்டி இளைஞர்கள் மகிழ்ச்சி..!!

   கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி பகுதியில் பாஜக. ஐடி விங், தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கபடி போட்டி நடைபெற்றது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நேதாஜி  கோப்பை என்ற பெயரில் சனி, மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெற்ற இந்த போட்டியை, கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே வசந்த் ராஜன் மற்றும் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் பாலச்சந்தர் துவங்கி வைத்தனர்.

45 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய குறிச்சி ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இந்த அணியினருக்கு கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் பாலச்சந்தர் வெற்றி கோப்பையை வழங்கினார்.வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்க பரிசாக இருபதாயிரம் வழங்கப்பட்டது. இதனை கோவை தெற்கு மாவட்ட தலைவர் கே வசந்த ராஜன் வழங்கினார்.

மூன்றாவதாக வெற்றி பெற்ற குறிச்சி ஸ்போர்ட்ஸ் அணியினருக்கும், நான்காம் பரிசாக கே கே கணுவாய் அணியினருக்கும் பரிசுகள்  வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் குறிச்சி மண்டல் பிரபாரி, குறிச்சி மண்டல தலைவர் குறிச்சி மண்டல் பொதுச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள்  மற்றும் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியை ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர் ஈசா

Comments