கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது!!

 -MMH

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி தின விழா பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிர்வாக அறங்காவலர் அக்‌ஷய் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முன்னதாக,கல்லூரி முதல்வர் முத்துமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர்,தன்னம்பிக்கை பேச்சாளர் மரபின் முத்தையா கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர்,மாணவ,மாணவிகள் கல்லூரியில் பயிலும் போதே தங்களது திறனுக்கு ஏற்ற துறையை தேர்வு செய்து அதில் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,காலத்தின் அருமையை அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர்,நேரம் தவறாமையை இளம் தலைமுறை மாணவ,மாணவிகள் வாழ்வில் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில்,கல்லூரியில் சிறந்து சியல்பட்ட மாணவ,மீணவிகளுக்கு விருதுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  மாணவ,மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் கல்லூரி பேராசிரியர்கள்,துறை தலைவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments