அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை! காய்கறி வாகனங்களை வழி மறித்து உணவு தேடுவதை வழக்கமாக வைத்துள்ளது!!

 
  -MMH

அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை!
காய்கறி வாகனங்களை வழி மறித்து உணவு தேடுவதை வழக்கமாக வைத்துள்ளது!!

  காட்டுப்பகுதிகளில் இருந்து வெளிவரும் வனவிலங்குகள் சாலை பகுதிக்கு வந்து அவ்வப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை மறிக்கும் செயல் அவ்வப்போது நடந்து வருகிறது.

குறிப்பாக காட்டு யானைகள் தான் அதிகமாக வனத்தை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்து வாகனங்களை மறித்து வருகின்றன. வாகனங்களை மறிப்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் வாகனங்களை நோக்கி யானைகள் ஓடி வருவது, வாகனங்களில் ஏதாவது பொருட்கள் இருந்தால் எடுத்து சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளது.

சில நேரங்களில் வாகனங்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் நிகழ்வதை நாம் காண முடியும். இதனால் வனப்பகுதி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவருமே எப்போது எந்த வனவிலங்குகள் சாலைக்கு வருமோ என்ற ஒருவித அச்சத்துடனேயே அந்த சாலைகளில் பயணித்து வருகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வகையில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வசிக்கும் மக்களை மட்டுமின்றி, அந்த வழியாக சாலையில் செல்வோரையும் அச்சப்படுத்துவதில் பிரபலமாகி உள்ளது படையப்பா என்ற காட்டு யானை. படையப்பா காட்டு யானை கடந்த சில நாட்களாக

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மறையூர் அடுத்த கன்னிமலை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்து வருகிறது. இரவு நேரங்களில் இந்த யானை சுற்றி திரிவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த யானை அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.                   

இந்த நிலையில் நேற்று இரவு கேரள மாநிலம் மூணாறில் இருந்து தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு கேரள அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பஸ் அதிகாலை உடுமலை அடுத்த மறையூர் பகுதியில் உள்ள கன்னிமலை எஸ்டேட் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, கன்னிமலை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்த படையப்பா என்ற காட்டு யானை திடீரென கிராமத்தை விட்டு வெளியேறி உடுமலை-மூணாறு சாலைக்கு வந்தது. அப்போது அந்த வழியாக வந்த கேரள அரசு பஸ்சை திடீரென படையப்பா காட்டு யானை மறித்தது. யானை வருவதை பார்த்த பஸ் டிரைவர், பஸ்சை சில அடி தூரங்களில் நிறுத்தி விட்டார்.

இருப்பினும் யானை காட்டுக்குள் செல்லாமல், பஸ்சை நோக்கி வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்பட்டது. ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். பஸ்சின் அருகே வந்த படையப்பா காட்டு யானை, பஸ்சின் முன் பகுதி கண்ணாடியை தன் துதிக்கையால், தடவி பார்த்ததுடன், அதனை தொட்டு ரசித்து மகிழ்ந்து விளையாடியது.

சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு நகராமல் பஸ்சின் கண்ணாடியை தன் துதிக்கையால் தடவி கொண்டே இருந்தது. ஆனால் யாருக்கும் எந்தவித தொந்தரவையும் கொடுக்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து யானை சாலையை விட்டு நகர்ந்து. மெல்ல வனத்தை நோக்கி சென்றது. யானை சென்ற பின்னர் பஸ் மீண்டும் உடுமலை நோக்கி வந்தது. யானை வந்ததால் அச்சம் அடைந்த பயணிகள் யானை எந்தவித தொந்தரவும் செய்யாமல் சென்றதால் நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, இந்த காட்டு யானை கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சுற்றி திரிந்து வருகிறது. அடிக்கடி ஊருக்குள்ளும் புகுந்து விடுவதால் அச்சம் ஏற்படுகிறது. அதிகாலை வேளையில் இவ்வழியாக வரும் காய்கறி வாகனங்களை வழி மறித்து உணவு தேடுவதை இந்த யானை வழக்கமாக வைத்துள்ளது. எனவே இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானையை கண்காணிக்க வேண்டும் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments