ஒட்டப்பிடாரத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் !!!

  -MMH

ஒட்டப்பிடாரத்தில்  திமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி  ஆலோசனை கூட்டம் !!!

  தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தொண்டர்களுக்கு    எழுதியுள்ள கடிதத்தில், "தலைவர் கலைஞருக்கு அவருடைய நூற்றாண்டு தொடக்க விழாவில் நாம் செலுத்தும் நன்றியாக, உடன்பிறப்புகளாம் உறுப்பினர்களை இருமடங்காக்கி, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டவேண்டும் என்று 22-03-2023 அன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் அ. இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

இளையராஜா அவர்கள் பேசியது: 

இரண்டாண்டுகால கழக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துச் சொல்லி, உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என அன்பழைப்பு விடுத்து, அவர்களின் முழு விருப்பத்துடன் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ



உறுப்பினர் கட்டணம் பத்து ரூபாய். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டே உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். அதனால் புதிய உறுப்பினர் எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தக்கூடியவர் என்பது உள்பட அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களும், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன் பெற்றவர்களும், பெற இருப்பவர்களும் புதிய உறுப்பினர்களாக விரும்பி இணையும்போது, கழகத்தின் வலிமை பெருகும். அது அடுத்தடுத்த தொடர் வெற்றிகளுக்கு உத்தரவாதத்தை வழங்கும்  என பேசினார். 


இந்த ஆலோசனை கூட்டத்தில்   மாவட்ட ஆதிதிராவிட நலக்குழ உறுப்பினர் ராஜேந்திரன் , ஒன்றிய அவைத் தலைவர்  சுப்பிரமணியன்  , மாவட்ட விவசாய அணி துணை தலைவர் துரைமுருகன்,  கிளை செயலாளர் சண்முகவேல் மொட்டையசாமி வேல்ராஜ் மற்றும் இளைஞரணி அனிட்டன் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments