ஒட்டப்பிடாரம் அருகே கபடி போட்டியில் தகராறு இளைஞர்கள் மோதல் !!!

 -MMH

தூத்துக்குடி மாவட்டம்   ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி நாரைக்கிணறு அருகே கபடி போட்டியில் இரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே மோதல் தொடர்பாக 30பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம்,  ஒட்டப்பிடாரம் வட்டம்   நாரைக்கிணறு அருகேயுள்ள     கே. கைலாசபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபடி போட்டி நடந்தது. அப்போது கே. கைலாசபுரம் மற்றும் கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே திடீர் மோதல் வெடித்தது. இதில் கே.கைலாசபுரம் வடக்கு தெரு மாரியப்பன் மகன் கீர்த்திவாசன் (18), வனராஜ் மகன்கள் சிவபாரத் (23), பாரத் (21), கேப்ரியல் மகன் அஜய் (22), வாசன் மகன் கார்த்திக் (24) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். 

இதுபோல் கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகன் பெரிய துரைராஜ் (27) என்பவர் காயம் அடந்தார். இது தொடர்பாக நாரைக்கிணறு காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் கீழக்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்த சிவனான்டி மகன் சண்முகவேல் உட்பட 13பேர் மீதும், கே.கைலாசபுரத்தைச் சேர்ந்த 17பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments