தூத்துக்குடியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி...

 

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு தொடர்ந்து தடை விதித்து வந்தது.இந்த தடை உத்தரவுக்கு எதிராக இந்த அமைப்பு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நாடியதை தொடர்ந்து தடைக்கு விலக்கு பெறப்பட்டது இதனை தொடர்ந்து  தமிழகத்தில் 45 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த   தமிழக அரசு அனுமதி அளித்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து துவங்கியது.  தொடர்ந்து பேரணி காமராஜர் சாலை, பிரையண்ட் நகர், சிதம்பரநகர் வழியாக சிதம்பரம் நகர் பின்னர் வி.வி.டி சிக்னல் அருகில் வந்து நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக சங்கத்தின் முன்னாள் இயக்குனர் தொழிலதிபர் எஸ்.தினகரன் தலைமை வகித்தார். வீரவநல்லூர் ஸ்ரீகுலசேகர ராமானுஜ மடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் ஆசியுரை வழங்கினார். வழக்கறிஞர் நா.சீனிவாசன் சிறப்புரை வழங்கினார். இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,  

-முத்தரசு கோபி.

Comments