மாவீரத் தளபதி ச.வெண்ணிக்காலாடியாருக்கு தென்காசியில் மணிமண்டபம் அமைக்க வியனரசு கோரிக்கை!!!

   -MMH

மாவீரத் தளபதி ச.வெண்ணிக்காலாடியாருக்கு  தென்காசியில் மணிமண்டபம்  அமைக்க  வியனரசு கோரிக்கை!!!

  மாவீரத் தளபதி ச.வெண்ணிக்காலாடியாருக்கு மாவட்டத் தலைநகர் தென்காசியில் மணிமண்டபம் கட்ட வேண்டும். த.தே.த.க.தலைவர் அ.வியனரசு கோரிக்கை.

நெற்கட்டும்செவல் பாளையத்தின் மாவீரத் தலைமைத் தளபதி ச.வெண்ணிக்காலாடியாருக்கு தமிழ்நாட்டு அரசு 50 இலட்சம் உரூபாயில் விஸ்வநாதபுரியில் சிலை அமைக்க இருப்பதாக அறிவிப்பு செய்திருக்கிறது.

இக்கோரிக்கையை 2019 இல் முதன் முதலில் முன்வைத்தது நாம்தான். நெற்கட்டும்செவல் மன்னர் பூலித்தேவர் மணிமண்டபத்தின்க  ல்வெட்டுகளில் மாவீரத் தளபதி வெண்ணிக்காலாடியாரின் பெருக்குபின் ஆதித் தெலுங்கு சமூகத்தின் பெயரான "பகடை" என தவறாகப் பொறிக்கப்பட்டுள்ளைக் கண்டு இருமுறை முதலில் நெல்லையிலும் இரண்டாவதாக தென்காசியிலேயும் மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பித்து திருத்தம் கோரிய போதே மாவீரருக்கு தனி மணிமண்டபம் கட்டி அதில் அவர் குதிரையிலிருக்கும் வடிவில் முழுவுருவச் சிலை அமைக்க வேண்டுமென அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்குத் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி ( தமிழர் விடுதலைக் கொற்றம்) சார்பாக விண்ணப்பித்தேன்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்போது தமிழ்நாட்டு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாவீரருக்கு சிலை வைப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

அதே வேளை, மாவீரத் தளபதி ச.வெண்ணிக் காலாடியாருக்கு மாவட்டத் தலைநகர் தென்காசியில் மணிமண்டபமும் நமது கோரிக்கைப்படி குதிரையுடனான முழுதிருவுருவச்

சிலையும் அமைக்க வேண்டுமே தவிர வெறும் சிலை அதுவும் விசுவநாதபேரியில் சிலை என்பது பொருத்தமானதாக இல்லை என்பதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு , வாசுதேவநல்லூர் ச.ம.உ.சதன்.திருமலைக்குமார், சங்கரன்கோவில் ச.ம.உ.இராஜா ஆகிய இரு சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு என சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மாவட்ட நிருவாகமும் எமது இந்த கோரிக்கையை தமிழ் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமென தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments