கிணத்துக்கடவு தாலுகாவிற்க்கு முதல் ஆண் தாசில்தார் பொறுப்பேற்பு!!

 -MMH

கிணத்துக்கடவு தாலுகா 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி முதல் தனி தாலுகாவாக செயல்பட தொடங்கியது. 

கிணத்துக்கடவு தாசில்தாராக அன்று முதல் இதுவரை 14 தாசில்தார்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் பெண்களாவர். கிணத்துக்கடவு தாசில்தாராக பணிபுரிந்து வந்த மல்லிகா இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை தலைமை செயலகத்தில் உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த த.சிவக்குமார் கிணத்துக்கடவு தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டார். 

இவர் கிணத்துக்கடவு தாலுகாவிற்க்கு பொறுப்பேற்ற முதல் ஆண் தாசில்தாராவார். புதிதாக பொறுப்பேற்ற தாசில்தாருக்கு கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments