ஆன்லைனில் வேலை தேடியவரின் பணத்தை பறித்த மர்ம கும்பல்!! சைபர் கிரைம் போலீசில் புகார்!!

 -MMH

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான மணிகண்டன், இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 27. 03. 2023 அன்று, ஆன்லைனில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து அவருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது, அவர் வாட்ஸ்அப் செய்தியில், குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, மணிகண்டன் என்ன வேலை என்று கேட்டுள்ளார். ​​​​உடனடியாக அவர்களை டெலிகிராமில் உள்ள ஒரு குழுவில், இனைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மணிகண்டனிடம் பேசிய மர்மநபர்கள் சிறு சிறு பணிகளை வழங்கியுள்ளனர். இதற்காக தாராளமாக பணத்தையும் மணிகண்டனுக்கு வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இதெல்லாம் உண்மை என்று நம்பிய மணிகண்டனிடம். இருந்து, 7, 96, 000 பணத்தை மர்ம நபர்கள் அவர்களது வங்கி கணக்கிற்க்கு அனுப்ப கூறியுள்ளனர். இந்த பணத்தை அனுப்பிய மணிகண்டனுக்கு பின்னர், பணியும் தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை. 

இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணிகண்டன், இது குறித்து நேற்று சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், வழக்கு பதிவு செய்து இவரிடமிருந்து 7லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை, மோசடியாக ஏமாற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன்.

Comments