திண்டுக்கல்-பாலக்காடு இடையே ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார்!!

  -MMH

திண்டுக்கல்-பாலக்காடு இடையே ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார்.

  கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த பாதையில் டீசல் என்ஜின் ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் திண்டுக்கல்-பாலக்காடு இடையேயான 179 கி.மீ. தூர ரெயில் பாதையை, மின்பாதையாக மாற்றும் பணி நடைபெற்றது. மேலும் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு என 3 கட்டங்களாக மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன. அதில் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி இடையே மின்மயமாக்கல் பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுவிட்டன.

அதையடுத்து பொள்ளாச்சி-பாலக்காடு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மயமாக்கல் பணி முடிந்தது. அதோடு திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பிரதமர் நரேந்திரமோடி திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம்  திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி திண்டுக்கல், பழனி, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

-.அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments