வேலைக்குச் செல்லாமல் பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட மருமகனை தாக்கிய மாமனார்!! காவல்துறையினர் விசாரணை!!!

 -MMH

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான கமலக்கண்ணன், இவரது மாமனார் பாபு, மூன்று ஆண்டுகளுக்கு முன் கமலக்கண்ணன், பாபுவின், மகளை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். கமலக்கண்ணன் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர், குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து, சிறைக்கும் சென்றுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணனின் மனைவி, கணவரிடம் கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் சிறையில் இருந்து வந்த கமலக்கண்ணன் சுந்தராபுரம் அடுத்த குறிச்சி பகுதியில் தனது மாமனாரை கண்டுள்ளார். அப்பொழுது மாமனாரிடம் ஏன் உங்களது மகளை என்னுடன் வாழ அனுப்பி வைக்க மறுக்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பாபு கமலக்கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் கடந்த கல்லை எடுத்து தாக்கி உள்ளார். 

இதில் காயமடைந்த கமலக்கண்ணன் கோவை அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், மேலும் இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில், கமலக்கண்ணன் நேற்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனின் மாமனார் பாபுவை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன்.

Comments