அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் வெளிநாட்டில் மருத்துவம் பயில வாய்ப்புகள்!!

  -MMH

அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் வெளிநாட்டில் மருத்துவம் பயில வாய்ப்புகள்!!

    கோவை: அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் வெளிநாட்டில் மருத்துவம் பயில வாய்ப்புகள் உருவாக்கி தருவதாக ஷாலோம் அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் அனிதா காமராஜ் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்தவர் அனிதா காமராஜ். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வி ஆலோசகராக செயல்பட்டு வரும் இவர்,ஷாலோம் மருத்துவ கல்வியகம் எனும் மையத்தை கோவை உட்பட சென்னை,சேலம்,ஈரோடு என பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.12 ஆம் வகுப்பு முடித்து  மருத்துவ கல்வி பயிலும் ஆர்வத்தோடு உள்ள மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைப்பதில்லை.இது போன்ற மாணவ,மாணவிகளின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் வகையில் வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் சேவையில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஷாலோம் டிரஸ்ட் மற்றும் மருத்துவ கல்வி மையத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலக துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பக்தவத்சலம் கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய மையத்தின் செயல்பாடு குறித்து அனிதா காமராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்போது வெளிநாடுகளில் மருத்துவம் பயில மாணவ,மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்ட அவர்,வெளிநாட்டில் மருத்துவம் பயின்றாலும் இந்திய மருத்துவ துறையில் அதற்கான மதிப்பு இருப்பதாக குறிப்பிட்டார். தற்போது அதிக மாணவிகளும் வெளிநாடுகளில் மருத்துவம் பயில ஆர்வம் காட்டுவதாக கூறிய அவர்,இதற்கு காரணம் நல்ல பாதுகாப்பான சூழ்நிலையில் மருத்துவ கல்வி பயில்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எங்களது மையம் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஷாலோம் அறக்கட்டளை வாயிலாக நீட் தேர்வில் வெற்றி பெற்று இடம் கிடைக்காத அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வெளிநாட்டில் மருத்துவம் பயில இலவச திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments