ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா கால் நட்டு விழா !!!

 


 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் ஏப்ரல் 16 இல்  சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று கால் நட்டு விழா நடைபெற்றது. 

ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனாரின் 253 வது பிறந்தநாள் விழா ஏப்ரல் 16 அன்று நடைபெறுவதை முன்னிட்டு இன்று கவர்னரில் உள்ள சுந்தரலிங்கனாரின் மணி மண்டபத்தில் கால்நாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சுந்தரலிங்கனாரின் நேரடி வாரிசு பொன்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் முருகன் கால் கட்டினார், நிகழ்வில் செயலாளர் தெய்வேந்திரன், இளைஞர் அணி சுரேஷ் கண்ணன், கதிர் ஈஸ்வர் முருகானந்தம், நாகராஜ், முகேஷ் லிங்கம், கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments