பயிற்சி பட்டறை பிபிஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது!!

 

 -MMH

பயிற்சி பட்டறை பிபிஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

  பிபிஜி பார்மசி கல்லூரி "மருத்துவ மருந்தாளுனர்கள் பங்களிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு"  என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை பிபிஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

பிபிஜி பார்மசி கல்லூரி  முதல்வர் டாக்டர் S.ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கார்த்திக் ராகம் (Avenida Innovations CEO) கலந்து கொண்டு,HIV நோயாளிகள் குறித்த ஆய்வு மற்றும் அவர்களுக்கு அளிக்கும் மருந்து விகிதம் குறித்த ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.மேலும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட ஹைதராபாத்தை சார்ந்த மருத்துவ மருந்து ஆளுனர் கோகுல் சம்பத்குமார்  அவர்கள் தனது தொழில்முறை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக திரு.N.சுந்தரராஜன் துறைத்தலைவர் (பொறுப்பு), உதவி பேராசிரியர் ஜீவனா S அவர்களும் ,மருந்தியல்  துறை இணைப் பேராசிரியர் R.ராஜகுமாரி அவர்கள் மற்றும் இறுதி ஆண்டு B.Pharm மாணவர்  அமைப்பாளர்கள் குழு (AURA 2019)  இணைந்து செயல்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தனர். பிபிஜி கல்விகுழுமங்களின் தலைவர் தங்கவேல் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்.மேலும்  ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து  B.Pharm, Pharm.D கல்லூரிகளிலிருந்து    பேராசிரியர்கள் மற்றும் சுமார் 200 மாணவர்கள்   கலந்து கொண்டு பயனடைந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments