வால்பாறை பூனாட்சி வனப்பகுதியில் அழுகிய நிலையில் யானை!!
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பூனாட்சி மலை பீல்ட் பகுதியில் ஆண் யானை இறந்து பல நாட்கள் ஆகி அழுகிய நிலையில் கிடந்ததை ரோந்து பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ உடனே வனத்துறை தகவல் தெரிவித்து கால்நடை மருத்துவர் டாக்டர் விஜயராகவன் மற்றும் மருத்துவக் குழு ஏ சி பி செல்வம் கார்த்திக் வனட்சரக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு உடற்கூறு ஆய்வின் போது தந்தம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.
பின்பு இறந்த யானையுடன் இரண்டு யானைகள் சண்டை இட்டு பெரிய பள்ளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என கூறியுள்ளார்கள். இறந்த யானைக்கு சுமார் 37 வயது இருக்கலாம் என உடற்கூறு ஆய்வு தெரிவிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.
Comments