மாநகர பகுதிகளில் 170 புகையிலை விற்கும் கடைககளுக்கு பூட்டு!!

இந்தியாவிலே முதன்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் இன்போகிராபிக் இணைய வழி புத்தகத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன் வெளியிட்டனர்.நிகழ்வைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருப்பது ஒரு புறம் இருந்தாலும் அதனை கட்டுபடுத்துவது என்பது சவாலான ஒன்றாக உள்ளது எனவும் 2000 கிலோ வரையிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்.

250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன  275  பேர் கைது செய்யபட்டுள்ளனர் எனவும் திரையரங்குகளில் ஏற்படுத்தபடும் விழிப்புணர்வு என்பது மக்கள் மனதில் அதிகம் பதிகிறது ஆனால் புகையிலை பிடிப்பவர்கள் மத்தியில் தாக்கதை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.ஆனால் தற்போது அதிகளவில் பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவில் புழக்கம் உள்ளது வேதனைக்குரியது. இளைஞ்ர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இந்த விழிப்புணர்வு ஒரு ஓவியமாக அல்லது கார்ட்டூனாக கொண்டு வந்தால் அது விரைவில்  பள்ளி மாணவர்களை சென்றடையும் என்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் ஒருவர் குடிப்பதை பார்க்கும் போது தான் மற்றவர்களுக்கு அதனை பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் தூண்டப்படுகிறதாகவும் மாநகர பகுதிகளில் புகையிலை விற்கும் 170 கடைகள் மூடப்பட்டுள்ளது எனவும் புதிதாக துவக்கபட்ட சுந்தராபுரம் காவல் நிலைநிலையத்தில் 400கிலோ புகையிலை பிடிக்கபட்டது அது கூல்லிப் எனப்படும் போதை பொருள் இது குறிப்பாக பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்கப்படுகிறது. இது கேரளாவிலிருந்து கொண்டு வரபட்டுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் அதிகளவில் புகையிலை பயன்பாடுள்ளது. தமிழகத்தில் அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

புகையிலை விற்கும்  ஒரு கடையை மூடினால் வேறோரு பகுதியில் மீண்டும் ஒரு கடை துவக்கபடுகிறது அதற்கு காரணம் அதிகளவில் முதலீடும் அதிகளவு லாபமும் தான்.முக்கிய காரணம் தமிழக அரசு புகைகளை பொருட்களுக்காக பல்வேறு விழிப்புணர்வுகளும் செய்து வருகிறது வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவு புகையிலேயே பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கும் விழிப்புணர்வு  மிக முக்கியம் என இவ்வாறு தெரிவித்தார்.மேலும் குறிப்பாக  புற்றுநோய் காரணமாக வருடத்திற்கு 9 லட்சம் பேர் இறந்து வருவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்  ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் குகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments