ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி ஸ்ரீ வீரசக்கதேவி ஆலய 67வது திருவிழாவையொட்டி கால் நட்டு விழா நடைபெற்றது !!!

 -MMH

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி ஸ்ரீ வீரசக்கதேவி ஆலய 67வது திருவிழாவையொட்டி கால் நட்டு விழா நடைபெற்றது !!!

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வளாகத்தில், கட்டபொம்மனின் குலதெய்வமான ஸ்ரீ வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ வீரசக்கதேவி ஆலய 67 வது திருவிழா வரும் மே 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதை அடுத்து வீரசக்க தேவி ஆலய திருவிழாவை கால் நட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகளும் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


ps://youtu.be/2sUYdTSc4BI

தொடர்ந்து வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருகப் பூபதி செய்தியாளர்களிடம் கூறுகையில்;

"மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆலய விழாவிற்காக ஜோதி கொண்டு வரும்போது இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது எனவும் ஜோதியானது திருச்செந்தூர் கயத்தார் வைப்பார் சிங்கிலிபட்டி ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜோதி கொண்டுவரப்படுகிறது இதில் திருச்செந்தூரில் இருந்து கொண்டுவரப்படும் ஜோதிக்கு மட்டும் ஒருவாள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

மற்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் ஜோதிக்கு வாள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எங்களுக்கு அனைத்து ஜோதிகளுக்கும் இரு வாள்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் மறுக்கப்படும் பட்சத்தில், ஜோதி எடுத்து வரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் வாள் எடுத்துச் செல்வோம் எனவும், இருசக்கர வாகனங்களில் செல்வோம் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலய குழு சார்பாக தெரியப்படுத்திக் கொள்கிறோம்." என தெரிவித்தார்.

https://youtu.be/2sUYdTSc4BI

நிகழ்ச்சியில் வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருக பூபதி, செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் சுப்புராஜ் சௌந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .


நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments